திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர் மாணவி தவறான சிகிச்சையால் உயிரிழந்த சம்பவத்தில், தரமற்ற மருந்தே காரணம் என விசாரணை குழுவின் அறிக்கை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. டெக்சாம்மெதாசோன் என்ற தரமற்ற மருந்தின் பயன்பாடுதான் மாணவியின் உயிரிழப்புக்கு காரணம் என்றும், அந்த மருந்து பேட்சை பயன்படுத்த வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை தொடர்ந்து சக செவிலியர் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.