திருச்சி நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வழக்கறிஞர்கள் இதனை கவனித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, பாம்பை லாவகமாகப் பிடித்தனர். பின்னர், பிடிக்கப்பட்ட பாம்பு பாதுகாப்பாக வனப்பகுதியில் விடப்பட்டது. இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.