திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்பி செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் கண்டோண்மெண்ட், செசன்ஸ் கோர்ட், அரியமங்கலம், ஏர்போர்ட், ஸ்ரீரங்கம், உறையூர், அரசு மருத்துவமனை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மூன்று கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.