இதையடுத்து அந்த காரை பின்னோக்கி ஓட்டுநர் எடுத்த போது சாலையோரத்தில் படுத்திருந்த அந்த பக்தரின் தலையில் காரின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்தார். உடனே அக்கம் பக்கத்தில் சமயபுரம் போலீசருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுனர் சமயபுரம் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார். விசாரணையில் கரூர் மாவட்டம் சாமிநாதபுரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பதும் தெரியவந்தது. இதை அடுத்து விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்து கார் ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.