திருச்சி எடமலைப்பட்டி புதூர் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் இவர் எடமலைப்பட்டி புதூர் புதுக்குடி நீர் தொட்டி அருகே கடந்த 19ஆம் தேதி நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ரௌடிகள் எடமலைப்பட்டி புதூர் அருண் என்கிற அருள்தாஸ் மற்றும் சதீஷ் என்கிற அந்தோணி ஆகிய இருவரும் பாலசுப்பிரமணியனை கத்தி முனையில் மிரட்டி பணம் கேட்டனர். அவர் கொடுக்க மறுத்தார். இது குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிந்து அருணை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர். தப்பிய சதீஷை தேடி வருகின்றனர்.