அதன்படி இன்று நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்காகத் தொழுகைகளில் சிறப்புத் தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இஸ்லாமியர்கள் புனித பண்டிகையாக ரமலானை கொண்டாடி வருகிறார்கள். திருச்சியில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சி முதர்ஷா பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் முகமதுராஜா தலைமையில் ரமழான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் கலந்துகொண்டு தொழுகை நடத்தினர். அதன் பின்னர் அனைவரும் கட்டித் தழுவி தங்களது ரமழான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
கண்டித்த பள்ளி ஆசிரியர்கள்.. துப்பாக்கியுடன் மிரட்டிய மாணவர்