திருச்சி மாவட்ட மின்வாரியங்களில் பொதுமக்கள் குறைதீர்கூட்டம்

திருச்சி மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த கோட்ட அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் மாதம் முழுவதும் நடைபெறுகிறது. இதில் துறையூர் கோட்டத்தில் வருகிற 3-ந்தேதியும், முசிறி கோட்டத்தில் 6-ந்தேதியும்,10-ந்தேதி லால்குடி கோட்டம்,13-ந்தேதி ஸ்ரீரங்கம் கோட்டம், (பிச்சாண்டார்கோவில் கிராமம் உட்பட)17-ந்தேதி திருச்சி நகரிய கோட்டம்,20-ந்தேதி திருச்சி கிழக்கு கோட்டம், 24-ந்தேதி மணப்பாறை கோட்டம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. 

எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மின்நுகர்வோர்கள் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவலை திருச்சி மேற்பார்வை பொறியாளர் செல்வி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி