முசிறியில் நகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம்

திருச்சி மாவட்டம், முசிறி நகராட்சிக்குட்பட்ட 18வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள், குறிப்பாக கழிவறை வசதி இல்லாததால் பெண்கள் ஆற்றுப்பகுதிகளில் மலம் கழிக்க நேரிடுவதாகக் கூறி, அப்பகுதி மக்கள் 18வது வார்டு உறுப்பினர் நவீன் குமார் தலைமையில் நகராட்சி ஆணையரை கண்டித்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி