திருச்சி பெட்டவாய்த்தலை துணை மின் நிலையத்தில் நாளை (10ஆம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அப்பகுதிகளுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்டவாய்த்தலை, பழங்காவேரி, பழையூர்மேடு, தேவதானம், நங்கவரம், கோட்டையார்தோட்டம், குமாரமங்கலம், குளித்தலை, பொய்யாமணி, நச்சலூர், சிறுகாடு, சங்கிலியாண்டபுரம் ஆகிய பகுதிகளும், சிறுகமணி துணைநிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் வள்ளுவர் நகர், காமநாயக்கன்பாளையம், காவல்காரன்பாளையம், சிறுகமணி, பெருகமணி, அந்தநல்லூர், ஜீயபுரம், திருப்பராய்த்துறை ஆகிய பகுதிகளும் பாதிக்கப்படும்.