இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஜேஸ்மின் ராக்ஷி தனது சேலையில், பேன் மாட்டும் கம்பியில் தூக்குமாட்டிக் கொண்டு இறந்துள்ளார். தகவல் அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்து உறவினர்கள் வசம் ஒப்படைத்தனர். மேலும் வையம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து திருமணமான மூன்று வருடத்தில் இறந்ததால் வையம்பட்டி காவல் ஆய்வாளர் தனபாலன், மணப்பாறை உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்திய பாஜக: 53 தொகுதிகள் கேட்டதால் பரபரப்பு