துறையூர் அருகே சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நபர் தற்கொலை

துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நாகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் இவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் ஏற்பட்ட மனச்சோர்வு காரணமாக நேற்று பூச்சிக்கொல்லி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில் உறவினர்கள் அவரை துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி