தஞ்சாவூர் மாவட்டம் ராயமுண்டன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் தனது இருசக்கர வாகனத்தில் கடந்த 24 ஆம் தேதி அன்று திருச்சி துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவராயநேரி பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி பலத்த காயமடைந்தார். இதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.