மதுரை வாடிப்பட்டியைச் சேர்ந்த அழகுமணி (35), திருச்சியில் இலவச லேப்டாப் தருவதாக நேவி (34) என்பவர் கூறியதை நம்பி மகனுடன் திருச்சி வந்தார். மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தபோது, நகைகள் அணிந்தால் லேப்டாப் தரமாட்டார்கள் என்று நேவி கூறியதால், அழகுமணி தனது மூன்றே முக்கால் பவுன் நகைகளை கழற்றி ஹோட்டலில் வைத்துவிட்டு வெளியே சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது நகைகள் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த அழகுமணி, கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.