இதை அனைத்தையும் மீட்ட அவர் இதுகுறித்து திருச்சி சரக ஐ.ஜிக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார், மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று சிலையைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் சிலைகள் ஐம்பொன்னினால் ஆன பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தெய்வங்களின் சிலைகள் என்பதும் அதனுடன் மீட்கப்பட்ட பொருட்கள் சாமிக்குப் பூஜைகள் செய்ய பயன்படுத்தப்படும் செப்புப் பொருட்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த 3 ஐம்பொன் சிலைகளின் மதிப்பு சுமார் 50 கோடி இருக்கலாம் என்பது வட்டாட்சியர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பதற்காக மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் முன்னிலையில் வருவாய்த்துறையினர் சிலைகளைக் கைப்பற்றி எடுத்துச் சென்றன