தொட்டியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவருக்கு எட்டு வருடங்களுக்கு முன் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருடைய குடிப்பழக்கம் காரணமாக அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மனைவி அவரைப் பிரிந்து அவரது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் சுரேஷ் நேற்று வீட்டில் சேலையால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் தொட்டியம் போலீசார் சுரேஷின் உடலை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.