திருச்சி மாநகரின் அடையாளமாக விளங்கும் நூறாண்டு பழமை வாய்ந்த காந்தி மார்க்கெட் பஞ்சப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திருச்சி வந்த சீமானிடம், காந்தி மார்க்கெட்டை இடம் மாற்றம் செய்ய வேண்டாம் என்பதற்கு ஆதரவாக இருக்க வலியுறுத்தி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். இந்த இடமாற்ற விவகாரம் வியாபாரிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.