மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 125 பயணிகளுடன் சென்னை நோக்கிப் புறப்பட்ட விமானம், சென்னையில் நிலவிய மோசமான வானிலை காரணமாக திருச்சி விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பயணிகள், சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.