திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் அருகே கீழக்குன்னுபட்டியைச் சேர்ந்த முதியவர் திருப்பதி, டூ வீலரில் சென்று கொண்டிருந்தார். பெரம்பலூர் நெடுஞ்சாலையில் சாலையைக் கடக்க முயன்றபோது, சிமெண்ட் லோடு ஏற்றி வந்த லாரி அவர் மீது மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நிலைதடுமாறிய லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.