மதுரையைச் சேர்ந்த பார்விமல் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் நிறுவனம், ஐரோப்பாவிற்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி செந்தில்குமார், வரதராஜன், சுப்பிரமணியன் ஆகியோரிடம் தலா 2 லட்சம் பெற்று ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மூவரும் திருச்சி நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தனர். விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சேகர், சம்பந்தப்பட்ட ட்ராவல்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்ட மூவருக்கும் தலா 3.15 லட்சம் ரொக்கத்தை 45 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.