திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு சங்கு பூஜை நடைபெற்றது. சங்குகளில் புனித நீர் நிரப்பி பூஜிக்கப்பட்டு, பின்னர் பக்தர்களின் கைகளில் வழங்கப்பட்டது. பக்தர்கள் இந்த புனித நீரை ஏகாம்பரேஸ்வரருக்கு அபிஷேகம் செய்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.