திருச்சி: ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு; கலெக்டரிடம் மனு

திருச்சி பொன்மலை பகுதியைச் சேர்ந்த ஆசிரியையான ரம்யா வீட்டில் வேலை செய்து வந்த வனஜா என்பவர் ஏழரை சவரன் தங்க நகைகளை திருடியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் ஏழரை லட்சம் மதிப்புள்ள நகைகளை 75 ஆயிரம் என குறிப்பிட்டு எஃப்ஐஆர் பதிவு செய்ததால் ஏமாற்றமடைந்த ரம்யா, மாவட்ட ஆட்சியரிடம் உரிய நகையை மீட்டு தரக்கோரி புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி