முசிறியில் குடிநீர் வேண்டி பொதுமக்கள் சார் ஆட்சியரிடம் மனு

முசிறி அருகே அட்டாளப்பட்டி கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளாக வந்து கொண்டிருந்த காவிரி குடிநீர், கடந்த 20 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், கிராம மக்கள் 3 கிலோமீட்டர் தூரம் சென்று குடிநீரை எடுத்து வரும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து, கிராம பொதுமக்கள் சுமார் 25க்கும் மேற்பட்டோர் முசிறி சார் ஆட்சியர் சுஷ்ரி சுவாங்கி குந்தியாவிடம் கோரிக்கை மனு அளித்து, உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி