இவர்களுக்குள் தங்கள் பூர்வீக சொத்து தொடர்பாக முன்விரோதம் நிலவி வருகிறது. சம்பவம் நடந்த நேற்று இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதில் மணிவண்ணனை அவருடைய அண்ணன் சிதம்பரம், அவருடைய மகன்கள் சுரேஷ், கார்த்திகேயன் ஆகிய மூவரும் சேர்ந்து தாக்கினர்.
காயமடைந்த மணிவண்ணன் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தா.பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவரை தாக்கிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.