முசிறி அருகே கிணற்று நீரில் இளைஞர் சடலம்

முசிறி அருகே தா. பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவனூர் பகுதியைச் சேர்ந்தவர் திருமூர்த்தி (26), பாரத் கேஸ் நிறுவனத்தில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடந்த நேற்று தூங்குவதற்காகச் சென்ற அவர் காலையில் எழுந்து பார்த்தபோது காணவில்லை. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய தாய் அக்கம் பக்கத்தில் பார்த்தபோது அருகில் இருந்த கிணற்றில் திருமூர்த்தி சடலமாக மிதந்தார். 

இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலையத்தினர் திருமூர்த்தியின் உடலை மீட்டு தா. பேட்டை காவல் துறையிடம் ஒப்படைத்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் விபரீதம் நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி