காரைக்காலில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜகவினர் வரவேற்றனர். பின்னர், அவர் சாலை மார்க்கமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நட்சத்திர விடுதிக்குச் சென்றடைந்தார்.