மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து அரியலூர் நோக்கிச் சென்ற கற்கள் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி, சாலையோர தடுப்பு பேரிக்கார்டை கடக்கும்போது திடீரென திருப்பியதால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் இருந்த கற்கள் சாலையில் சிதறின. அதிர்ஷ்டவசமாக, லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து மணிகண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.