திருச்சி மாவட்டம் எலமனூர் பகுதியில் சரக்கு ஏற்றி வந்த இலகுரக வாகனம் ஒன்று சாலையோர வளைவில் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தின் ஓட்டுநர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். சம்பவ இடத்திற்கு சென்ற ரோந்து போலீசார் கிரேன் உதவியுடன் வாகனத்தை மீட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.