திருச்சி பாலக்கரை பகுதியைச் சேர்ந்த காந்தி என்பவர், அப்பகுதியில் உள்ள நகைக்கடையில் போலி நகையை அடகு வைத்ததாகக் கூறப்படுகிறது. நகை உரிமையாளர் கேட்டபோது, வீட்டிற்குச் சென்று பணத்தை எடுத்து வந்து நகையை வாங்கிக் கொள்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் திரும்ப வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைக் காணாததால், காந்தியின் மனைவி அளித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.