விதை திருவிழாவில் பாரம்பரிய நெல், சோளம், கம்பு, வரகு, தினை, சாமை, குதிரை வாலி உள்ளிட்ட நெல் விதைகள் அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. பாரம்பரிய நெல் விதைகள் விற்பனையும் நடைபெற்றது. அப்போது கிராமாலயா நிறுவனர் பத்மஸ்ரீ தாமோதரன், பசுமை சிகரம் விதை யோகநாதன், நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் ஒருங்கிணைப்பாளர் வானகம் ரமேஷ் உள்ளிட்ட பலர் பாரம்பரிய விதைகளின் மீட்கப்படுவதன் அவசியம் குறித்தும், தற்போதைய நோய்களின் தாக்கம் குறித்தும் விரிவாக பேசினர்.
நிகழ்ச்சியில் இலவச சித்த மருத்துவம் மற்றும் ஆங்கில மருத்துவ முகாம் நடைபெற்றது. விழாவில் எம்ஐடி மற்றும் இமயம் வேளாண் கல்லூரி பயிற்சி மாணவ, மாணவிகள் விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.