துறையூர் சிங்களாந்தபுரம் சாலையில் உள்ள தில்லை நகர் பகுதியில் வசிக்கும் ரமேஷ், நேற்று முன்தினம் குடும்பத்துடன் உறவினர் இல்ல நிகழ்வுக்காக வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றார். இரவு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 சவரன் தங்க நகைகள், 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு லேப்டாப் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து துறையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.