திருச்சி முக்கொம்பு ஆற்றில் மூழ்கி வாலிபர் சாவு

திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டியைச் சேர்ந்த மகேந்திரன், தனது உறவினர்களுடன் சமயபுரத்திற்கு வந்து தரிசனம் முடிந்து திரும்பும்போது, முக்கொம்பு காவிரி ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றுள்ளார். நீர்ச்சல் தெரியாததால் ஆழமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்தார். வாத்தலை போலீசார் தீயணைப்புத் துறையினர் உதவியுடன் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி