திருச்சியில் குழந்தையுடன் இளம் பெண் மாயம்

திருச்சியில் குடும்ப தகராறு காரணமாக, குழந்தையுடன் இளம்பெண் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சங்கிலியாண்டபுரம் ராமமூர்த்தி நகரைச் சேர்ந்த பிரகதீஸ்வரன் (27) மற்றும் செந்தாமரை (23) தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. அடிக்கடி ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, கடந்த 31 ஆம் தேதி செந்தாமரை தனது குழந்தையுடன் வீட்டை விட்டுச் சென்றார். அவரை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து பாலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி