திருச்சி மாவட்டம் முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர். முசிறி சப் கலெக்டர் சுஷ்ரீ சுவாங்கி குந்தியா கொடி அசைத்து பேரணியைத் தொடங்கி வைத்தார். இந்தப் பேரணி முசிறி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பள்ளியில் நிறைவடைந்தது. பேரணியில் மாணவர்கள் 100% வாக்குப்பதிவு அவசியம் என கோஷமிட்டும், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.