திருச்சி பாலக்கரை ஆலம் தெரு பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த திலீப் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், குப்பன் குளம் ரயில்வே கேட் அருகே போதை மாத்திரை விற்ற ஜீவா நகர் கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த ரவுடி கார்த்திகேயன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் சிரஞ்சீவிகள் பறிமுதல் செய்யப்பட்டன.