திருச்சி உறையூர் காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராம் பிரசாத் வெக்காளியம்மன் கோவில் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். கடந்த 2023 ஆம் ஆண்டு இவர் தனது காரை நண்பரான நெசவாளர் காலனி சேர்ந்த வசந்தகுமார் என்பவர் இரவல் வாங்கிச் சென்றார். இரண்டு ஆண்டுகளாகியும் காரை திரும்ப தரவில்லை. இதுகுறித்து ராம் பிரசாத் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வசந்தகுமார் கைது செய்து அவரிடமிருந்து காரை மீட்டனர்.