திருச்சி: நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

ஸ்ரீரங்கம் துணை மின்நிலையத்தில் இன்று மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணிகள் காரணமாக, கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொதுதரைமட்ட நீர்த்தேக்க தொட்டி ஆகிய நீரேற்று நிலையங்களுக்கு மின் விநியோகம் இருக்காது. இதனால், மத்திய சிறைச்சாலை, சுந்தராஜ நகர், ஜே. கே. நகர், செம்பட்டு, காஜாமலை, எடமலைப்பட்டிபுதூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், தென்றல்நகர், கே. கே. நகர், அம்மா மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருக்காது.

தொடர்புடைய செய்தி