இந்நிலையில், நேற்று மீண்டும் ஏலம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி அலுவலக கூட்டரங்கில், ஏலம் எடுக்க விண்ணப்பித்திருந்தவர்கள் வந்து அமர்ந்தனர். ஏலத்தின்போது எவ்வித பிரச்சினையும் ஏற்படக்கூடாது என்பதற்காக சமயபுரம் போலீசார் பேரூராட்சி அலுவலகம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏலத்திற்கு சம்பந்தமில்லாத வெளிநபர்கள், அரசியல் கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் பேரூராட்சி அலுவலகத்தின் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை உள்ளே செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதைத்தொடர்ந்து பேரூராட்சி தலைவர் சரவணன், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. இதில் ரூ.1 கோடியே 97 லட்சத்து 9 ஆயிரத்திற்கு ஏலம் விடப்பட்டது.
இஸ்ரேல் - எகிப்து இயற்கை எரிவாயு ஒப்பந்தம் போடப்பட்டது