திருச்சி: கோவில் திருவிழா நடத்த அனுமதி கோரி மக்கள் தர்ணா

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று கொடியாலம் கிராம பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடியாலம் கிராம மகா மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா, கரகம் பாலித்தல், பால்குடம், தீமிதி போன்ற நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க மறுத்த ஜீயபுரம் போலீஸ் நிலையத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். மதுரை ஐகோர்ட் திருவிழாவை நடத்த அனுமதி வழங்கியும், போலீஸ் தரப்பில் மனு நிராகரிக்கப்பட்டதால், ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி