திருச்சி திருவானைக்காவல் பகுதியை சேர்ந்த சாகுல் அமீது(53) என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த புருசோத்தமன்(38) என்பவர் இவரது கடைக்கு வந்து இலவசமாக பிரியாணி கேட்டார். இதற்கு சாகுல் அமீது மறுத்ததால், புருசோத்தமன் அரிவாளை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் புருசோத்தமனை கைது செய்தனர்.