திருச்சி ஜெயில் கார்னர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த மீனாட்சி கடந்த 7ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்குச் சென்றார். அப்போது, மர்மநபர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பொருட்களைத் திருட முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரைப் பிடித்து கேகே நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டம் நலன்குடி பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் எனத் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.