திருச்சி: விபத்து இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி

திருச்சி உறையூரைச் சேர்ந்த பெரியசாமி 2016 ஆம் ஆண்டு அரசு பேருந்து மோதி உயிரிழந்தார். விபத்து வழக்கு முடிவடைந்து இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும், நீண்ட நாட்களாக வழங்கப்படாததால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் நீதிமன்றத்தை அணுகினர். இதைத் தொடர்ந்து, நீதிபதி அரசு பேருந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். பஞ்சாபூர் பேருந்து நிலையத்தில் நீதிமன்ற ஊழியர்கள் அரசு பேருந்து ஒன்றை ஜப்தி செய்தனர்.

தொடர்புடைய செய்தி