திருச்சி பொன்மலைப்பட்டி மெயின் ரோட்டில் உள்ள ஜெயில்காவலர் குடியிருப்பு நுழைவாயில் அருகில் குடிநீர் குழாய் உடைந்து, நல்ல தண்ணீர் பெருமளவில் சாக்கடையில் கலக்கிறது. இதனால் சாலைப் பகுதியில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. குடிநீர் வீணாகி சாக்கடை நீரில் கலப்பதால் தண்ணீரின் தரமும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இது குறித்து திருச்சி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கமும் பொதுமக்களும் வலியுறுத்தியுள்ளனர்.