தமிழக அரசு ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, திருச்சி மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த மதுபாலன், நாமக்கல் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும், திருச்சி மாநகராட்சிக்கு புதிய ஆணையர் நியமனம் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.