திருச்சி: அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

திருச்சி தில்லை நகரில் உள்ள அதிமுக மாநகர் மாவட்ட அலுவலகத்தில், மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், வரும் 24ம் தேதி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, மற்றும் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற கழக நிர்வாகிகள் அயராது பாடுபடுவது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய செய்தி