திருச்சி: ஒரே நாளில் 4 வீடுகளில் 57 பவுன் நகைகள் திருட்டு

திருச்சி சமயபுரம் சாலையில் கொள்ளிடம் நெம்பர் 1 டோல்கேட், பாலாஜி நகரைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (55). திருச்சி மாநகராட்சியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். ஸ்ரீதர் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நிலையில், அவர் வீட்டைப் பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டார். வெளியூருக்குச் சென்றிருந்த அவரது மனைவி முத்துச்செல்வி (50) வீட்டிற்குத் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவிலிருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டுக் கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 22 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 5000 ரொக்கம் உள்ளிட்டவைகள் திருடுபோயிருந்தது தெரியவந்தது. 

அதே பகுதியில் உள்ள ராயர் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (58). வேளாண் துறையில் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் இவர், வீட்டின் பூட்டுக்களை உடைத்து, பீரோவில் வைத்திருந்த 35 பவுன் நகைகள் மற்றும் பூஜை அறையில் இருந்த வெள்ளிப் பொருள்களையும் திருடிச் சென்றது தெரியவந்தது. இதற்கிடையே அமிர்தா நகரைச் சேர்ந்த கார்த்திகைவேல் (36) மற்றும் ஆனந்த் (40) ஆகிய இருவரது வீட்டின் முன்பக்க கதவுகளிலிருந்த பூட்டுக்களை மர்ம நபர்கள் உடைத்திருப்பதாக காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். வீட்டினுள் சென்ற மர்ம நபர்கள், அங்கு நகைகள் ஏதுமில்லாததால் கிடைத்த பொருள்களை திருடிச் சென்றுள்ளனர்.

தொடர்புடைய செய்தி