திருச்சி மத்திய மண்டலத்துக்குள்பட்ட 9 மாவட்டங்களில் ஜனவரி மாதம் மொத்தம் 789 கைப்பேசிகள் காணாமல்போனதாக புகாா் மனுக்கள் பெறப்பட்டன. இதில் 333 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் 18 கைப்பேசிகள் ஒப்படைக்கப்பட வேண்டியுள்ளது. 234 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட உள்ளன. நிலுவையில் உள்ள 456 புகாா் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்க மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் வே. பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா்.