திருச்சி: இறுதிச் சடங்கிற்கு சென்றவருக்கு ஏற்பட்ட சோகம்

திருச்சி சிறுகனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிகே அகரம் பகுதியைச் சேர்ந்த வங்கி ஊழியர் செல்வகுமார், தனது உறவினரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டபோது திடீரென உடல்நடுக்கம் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். அவரை இருங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த சிறுகனூர் போலீசார், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி