சேலம் மாவட்டம் கெங்கவல்லியைச் சேர்ந்த ராஜா, நவ.2 ஆம் தேதி அன்று இருசக்கர வாகனத்தில் துறையூர் அருகே கொப்பம்பட்டி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, சாலை ஓரத்தில் இருந்த பேரிகார்டில் மோதி பலத்த காயமடைந்தார். இருங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் (நவ.12) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.