திருச்சி ரெட்டமலை கோவில் காவிரி நகர் அருகே கஞ்சா விற்பனை செய்வதாக மதுவிலக்கு பிரிவு போலீசருக்கு தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்றதாக புங்கனூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் மதுரை சாலை அருகே கஞ்சா விற்றதாக பெரிய கடை வீதி சுண்ணாம்புகார தெருவைச் சேர்ந்த முகமது முஸ்தபா மற்றும் ராம்ஜி நகர் அருகே கஞ்சா விற்றதாக செந்தில் என்பவரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.