தா. பேட்டை பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

முசிறி அருகே தாத்தையங்கார்பேட்டை பிள்ளாதுறை பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று (20ஆம் தேதி) நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கணபதி வழிபாடு, முகூர்த்தக்கால் பூஜை, ஹோமங்கள், யாகவேள்வி பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாக வேள்வியில் இருந்து கடம் புறப்பாடாகி, கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் "ஓம் சக்தி பராசக்தி" என கோஷமிட்டனர்.

தொடர்புடைய செய்தி